Shadow

Tag: Kalpataru Pictures

சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி

சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி

சினிமா, திரைத் துளி
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் "தயாரிப்பு எண் 3" மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து இயக்குநர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, "சசிகுமார் மும்பையின் நெரிசல் மிகுந்த சாலைகளில் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி, அடிப்பது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பொது மக்களுக்குத் தெரியாத வண்ணம் மறைக்கப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி முழுக் காட்சியைப் படம்பிடிக்க முடிவு செய்தோம். இருப்பினும், இந்த சூழ்நிலையானது தலைகீழாக மாறியது. இது ஓர் உண்மையான மோதல் ...
சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சினிமா, திரைத் துளி
"ஜூன் 14ஆம் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகும் 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்தப் படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்று விளக்கினார். "அவர்கள் வெறும் இயக்குநர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், அவர்களின் நுணுக்கமான நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள்...