
கர விமர்சனம் | Kara review
போர் தொழில் இயக்குநரின் இரண்டாவது படமென்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருந்தது. 1990 காலகட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர் எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவும். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது கதை சார்ந்த காரணமல்ல, லாஜிக் சார்ந்த காரணம். கதை, படத்தில் நேர்கோட்டில் இருந்தாலும், அதை இன்னும் நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய பொறுப்புடன், கதையைச் சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறோம்.
தனுஷ் தனது 16-ஆவது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனது கிராமத்தில், தன் அப்பாவிடமிருந்து பணத்தைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார் (இவை காட்சிகளாக இல்லை), அதன்பின், தன் இளம் வயதில், திருச்சி அருகேயுள்ள திருவெறும்புதூரில் ஒரு எம்.எல்.ஏ வீட்டில் திருடுகிறார் தனுஷ். அந்தத் திருட்டில் மாட்டியும் விடுகிறார்....


