பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?
முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். 'இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்' எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்..
நாள் 39
"இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்" பாட்டைப் போட்டு எழுப்பி விட்டனர். குசும்புக்காகவே இந்தப் பாட்டைப் போட்ருக்கின்றனர். அதுவும் "இரு மணம் கொண்ட" வரி வரும் போது கவினையும், சாக்ஷியையும் கட் பண்ணி காட்டியவர்கள், "இடையினில் நீ ஏன்?" வரி வரும் போது லோஸ்லியாவைக் காண்பித்ததெல்லாம் வேற லெவல். எவனோ ஒருத்தர் எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து கற்றுக் கொண்ட மொத்...