
மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில்
“கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” எனும் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும், ‘மஸ்காரா’ அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உ...