Shadow

Tag: Kita Review

கிடா விமர்சனம்

கிடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  மதுரை மாநகரின் ஒட்டு மொத்த ஊரும் அடுத்த நாளின் தீபாவளி கொண்டாட்டங்களுக்காக  தயாராகிக் கொண்டிருக்க,  ஊருக்கு வெளிப்புறம் இருக்கும்  ஒரு சிறு கிராமத்தில், வயதான பெரியவரும் அவரின் பேரனும் தவிப்போடு அமர்ந்திருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பேரன் ஆசையாக கேட்ட ஆடையை வாங்கிக் கொடுப்பதற்காக அவன் ஆசையோடு வளர்த்த ”கிடா”-வை விற்கத் துணிந்தும், அதை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன ஆள் இன்னும் வரவில்லையே என்கின்ற பதட்டம். பேரனுக்கோ தான் ஆசைப்பட்டு கேட்ட ஆடைக்காக தான் ஆசை ஆசையாக வளர்த்த கிடாவை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்கின்ற பதட்டம்.  இவர்கள் இருவரின் பதட்டம் இதுவென்றால்,  கறிக் கடையில் ஆடு வெட்டுவதையே தொழிலாக கொண்ட தன்னை, குடிக்கிறேன் என்கின்ற காரணத்தால், தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது கடையை விட்டு அனுப்பிய தன்முதலாளி மகனுக்கு எதிராக தீபாவளி...