
குடும்பஸ்தன் | Zee5 இல் மார்ச் 7 முதல்
திரையரங்குகளில் பெருவெற்றி பெற்ற குடும்பஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025இல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிராபிக் டிசைனரான கதைநாயகன் நவீன், வேலை இழந்த பிறகு அவனது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையைப் படுசிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் நகைச்சுவையாகவும் சொல்கிறது.
மோ...