Shadow

Tag: Leader movie

லீடர் விமர்சனம் | Leader review

லீடர் விமர்சனம் | Leader review

சினிமா, திரை விமர்சனம்
தனது மகளுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் ஒரு பாசமிகு தந்தையின் அதிரடி ஆக்‌ஷன் தான் லீடர். தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சால்ட் எனும் ரெளடியைக் கண்காணிக்கிறார் காவல்துறை அதிகாரி இந்திரா. உண்மையைக் கண்டறிய சக்திவேல் எனும் மெக்கானிக்கின் மகளைக் கடத்தி துறைமுகத்திலுள்ள சந்தேகத்துக்குரிய கன்டெயினரைச் சாதுரியமாக மடக்குகிறார். அதனால் பெரும்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல், சால்டிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார், அவரால் எப்படித் தப்பிக்க முடிந்தது, உண்மையில் சக்திவேல் யாரென்பதற்கெல்லாம் பதில்தான் லீடர் படத்தின் கதை. லெஜண்ட் சரவணனின் முதற்படத்திலுள்ள அதே பிரம்மாண்டம் இப்படத்திலும் உள்ளன. ஆனால், இப்படத்தில் ஆடம்பர பிரம்மாண்டமாக இல்லாமல் கதைக்குத் தேவைப்படும் விஷுவலில் பிரம்மாண்டம் காட்டியுள்ளனர். நடிப்பிலும், முதற்படத்தை விட பல மடங்கு மெருகேறிப் படத்தில் கச்சிதமாகப் பொருந்தி...
“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்

“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்

சினிமா, திரைச் செய்தி
லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, "லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றைச் சொன்னார். அந்தக் கதைக்காக சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்குத் தயார்ப்படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியை...
“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்

“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்

சினிமா, திரைச் செய்தி
லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, " நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988 ஆம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்தக் கடைக்குச் சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு சட்டை...
லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை

லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை

சினிமா, திரைத் துளி
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் விமரிசையாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாகிறது. இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், "அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையைச் சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல...
“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER

“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லீடர்' என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். விழாவில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், "லீடர். இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் சார்ந்த படமா, அல்லது எந்த மாதிரி படம் என்ற கேள்வி வரும். இந்தப் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, அரசியல் சார்ந்த வசனங்களோ ஒரு துளி கூட கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர் ஃபிலிம். தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போ...
“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader

“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லீடர்' என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, "ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத்தான். அவருடைய படங்களைப் பார்க்கும்போது எல்லாத் தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லாப் படங்க...
“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா

“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லீடர்' என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்ரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். இவ்விழாவில் பேசிய திரு. விக்ரமராஜா, "நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும். தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை ஸ்தாபித்து அதனைப் பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் போது சில பிள்ளைகள் வெற்றி பெறுவதுண்டு, சில பிள்ளைகள் தோற்றுப் போவதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மாற்றாகக் கடுமையாக உழைத்து ஆசியா கண்டத்திலேயே சிறந்த விற்பனையாளர் என்று உயர்ந்து கொண்டிருப்பவர் தான் மரியாதைக்குரிய சகோதரர் லெஜண்ட் சரவணன். இது அவருட...