Shadow

Tag: Letterboxd cinema ranking

தமிழ் சினிமாவின் பெருமையான ‘கடைசி விவசாயி’

தமிழ் சினிமாவின் பெருமையான ‘கடைசி விவசாயி’

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. ‘கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்பிராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்குச் சாதகமாக அமையவில்லை. இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தைப் பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயாவும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்ததற்காக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் பாராட்டைப் பெற்றார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின...