Shadow

Tag: Lokesh Kanagaraj about Coolie movie reviews

“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ்

“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ''ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். கூலி படத்திற்குப் பிறகு, ஊடகங்களைச் சந்தித்துப் பேசவேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களைச் சந்திக்கிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களைச் சந்திக்கிறேன். 'கூலி' திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது. இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வசூல் பற்றி நான் பேச வ...