மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி
அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் 'மாயோன்' படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது.
பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில், அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக 'மாயோன்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பெரிய திரையில் முழு அனுபவத்தைப் பெறுவதற்காகத் தற்போது படக்குழு 'ஆடியோ விளக்க' பாணியிலான திரைப்படப் பதிப்பில் ஈடுபட்டுள்ளது.
இப்படத்தின் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் 'மாயோன்' படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீகப் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.
மாயோனுக்கு 'யு' சான்றிதழ் கி...