Shadow

Tag: Majid Majidi

ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்

ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
எந்தப் புதுமுக நடிகருக்கும் கிடைக்காத பெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்குக் கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனைப் பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவிப் பகுதியில் சுற்றித் திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்தப் படத்தில் தாராவிப் பகுதியைச் சேர்ந்த பையனாக நடிக்க வேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படத்தி...