Shadow

Tag: Mandavetti movie

மண்டவெட்டி – ஒரு பெண்ணின் உளவியலை உணர்வுப்பூர்வமாய்ப் பேசும் படம்

மண்டவெட்டி – ஒரு பெண்ணின் உளவியலை உணர்வுப்பூர்வமாய்ப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், 'வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கித் தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாகப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும், அதற்குப் பின்னாலுள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசுகிறது. கதையின் தேவையைப் பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத க...