Shadow

Tag: Mazhai Pidikatha Manithan

மழை பிடிக்காத மனிதன் – விஜய் மில்டன்

மழை பிடிக்காத மனிதன் – விஜய் மில்டன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது பார்வையைக் காட்சிகளாக மாற்றும் போது அந்தப் படைப்பின் காட்சிகள் புதுமையான காண் அனுபவத்தை அளிக்கும். படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.விஜய் மில்டன், “தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்குச் சிறப்பான நடிப்பின் ம...
மழை பிடிக்காத மனிதன் – மேகா ஆகாஷ்

மழை பிடிக்காத மனிதன் – மேகா ஆகாஷ்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம், எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. நடிகராக என் திறமையை வெளிப்படுத்த இந்தக் கதாபாத்திரம் அமைந்துள்ளது. என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மேலும், இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும், குறிப்பாக விஜய் ஆண்டன...
கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

சினிமா, திரைத் துளி
கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும், பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பர் நடித்த காட்சிகளுக்குத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் நகுல். தமிழ்த் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர் நகுல். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பணியாற்றி, தமிழ் மக்களின் இல்லத்துப் பிள்ளையாக மாறியுள்ளார். இப்போது, நடிகர் விஜய் ஆண்டனி நடித்த "மழை பிடிக்காத மனிதன்" படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்குப் பின்னணிக் குரல் கொடுத்துத் திரைத்துறையில் ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். படக்குழுவினர், தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களான நகுலையும், பிருத்வி...