Shadow

கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும், பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பர் நடித்த காட்சிகளுக்குத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் நகுல்.

தமிழ்த் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர் நகுல். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பணியாற்றி, தமிழ் மக்களின் இல்லத்துப் பிள்ளையாக மாறியுள்ளார். இப்போது, நடிகர் விஜய் ஆண்டனி நடித்த “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்குப் பின்னணிக் குரல் கொடுத்துத் திரைத்துறையில் ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். படக்குழுவினர், தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களான நகுலையும், பிருத்வி அம்பரையும் ஒன்றிணைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் மில்டன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மேலும், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் நடித்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், Infiniti Film Ventures நிறுவனம் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர், டிரெய்லர் & ஆடியோவை விரைவில் வெளியிடவுள்ளது.