Shadow

Tag: Memories movie Tamil review

மெமரீஸ் விமர்சனம்

மெமரீஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என மெமரீஸ் படத்தைப் பற்றி படக்குழு விளம்பரப்படுத்தினர். அதற்கு ஏற்றாற்போலே அமைந்துள்ளது திரைக்கதை. பார்வையாளர்களின் அதீத கவனத்தைக் கோரும் ஒரு படம். பிரதான கதாபாத்திரத்தின் கோணத்திலேயே படம் பார்க்கப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு, இப்படம் சவாலானதாக இருக்கும். கதை மூன்றாக விரிகிறது, பிரதான கதாபாத்திரமான வெற்றி, ஒவ்வொரு உப கதையிலும் ஒவ்வொரு ரோலில் வருகிறார். முதல் கதையில், மருத்துவர் பெருமாளின் குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த நான்கு கொலைகளையும் செய்தது உதவி இயக்குநர் வெங்கி எனத் தெரிய வருகிறது. வெங்கிக்கோ, விபத்தில் ‘மெமரி லாஸ்’ ஏற்பட்டுவிட, மருத்துவர் அபிநவ் ராமானுஜத்தின் உதவியோடு, வெங்கியின் நினைவைத் தட்டியெழுப்பி, அவன் புரிந்த கொலைகளைப் பற்றி அவனையே வாக்குமூலம் செய்ய வைக்கின்றார். இரண்டாவது கதை, நான்கு கொலைகளையும் செய்தது வெங்கி அல்ல என எட்டு வருட...