மின்மினி விமர்சனம்
கனத்த இருளில் சிக்கி ஒரு புழுவைப் போல் உழன்று கொண்டிருக்கும் ஒருவனை, ஒளிரும் வண்டான மின்மினிப் பூச்சியைப் போல் மாற்ற ஒருத்தி மெனக்கெடுகிறாள்.
பாரிமுகிலன் எனும் பள்ளி மாணவன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறான். பாரிமுகிலனின் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டதில், பிரவீணா எனும் பள்ளி மாணவிக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறுகிறது. பாரிமுகிலனைப் பற்றி அறிய நினைக்கும் பிரவீனாவிற்கு, பாரியின் மரணத்தால் தன்னியல்பை இழந்து, வாழ்வின் மீதான எந்தப் பிடிப்புமின்றி சுற்றித் திரியும் சபரியைப் பற்றித் தெரிய வருகிறது. சபரியை அதிலிருந்து பிரவீனா மீட்க நினைக்கும் பொழுது, சபரி காணாமல் போய்விடுகிறான். சபரியின் ஒளியை அவனுக்கு பிரவீனாவால் மீட்க முடிந்ததா என்பதே படத்தின் கதை.
பதின் பருவத்து நடிகர்கள், வளர்ந்து வாலிப பருவம் எய்துவதற்காக எட்டு வருடம் காத்திருந்து இப்படத்தை முடித்துள்ளார் ...