Shadow

Tag: Monster movie review in Tamil

மான்ஸ்டர் விமர்சனம்

மான்ஸ்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் அல்லாமல், பெரியவர்களும் ரசித்து மகிழும்படியான படமாகவும் உள்ளது. அஞ்சனம் அழகியபிள்ளை, பெண் பார்ப்பதற்காக மேகலா வீட்டிற்குச் செல்கிறார். மேகலாவாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கதைக்கு உதவாத கதாபாத்திரம் எனினும் நிறைவாகத் தோன்றியுள்ளார் படத்தில். எஸ்.ஜே.சூர்யாவும், எலியும் தான் பிரதான பாத்திரங்கள் என்ற...