Shadow

Tag: Movie Buff

“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா

“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா

சினிமா
வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக் குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள். அவ்விதமாக மூவி பஃப் - ஃபர்ஸ்ட் கிளாப்: சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது. இந்தக் குறும்படப் போட்டியில் கல்கியை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூபாய் 3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்ததாக, கம்பளிப்பூச்சி இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம் குறும்படத்திற்காகச் சாரங் தியாகு ரூபாய் 1 லட்சம், குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் மயிர் குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூபாய் 25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள். 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின...
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள்

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள்

சினிமா
மூவி பஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூவி பஃப் ஃபர்ஸ்ட் கிளாப் சீஸன் -2 வின் போட்டிகள் ஜனவரி மாதம் இருபதாம் தேதியன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் சீஸனை விட மும்மடங்கு அளவில், அதாவது 750க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் போட்டியாளர்களாகப் பங்குபெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்த...
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

சினிமா, திரைச் செய்தி
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 1 மூவிபஃப், 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகை தந்த அனைத்து இளந்தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதைக்களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்தக் குறும்படப் போட்டியைத் தொடங்கியிருக்கிறோம். தற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையைக் குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களைப் பரவசமட...
குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி மூவி பஃப் நடத்திய ஃபர்ஸ்ட் கிளாப் எனும் குறும்படப் போட்டியின் முடிவுகள் கோலாகலமாக சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் எழில், இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, இயக்குநர் S.U.அருண் குமார், 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன், திரை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, படத்தொகுப்பாளர் K.L.பிரவீன், ஒலிப்பதிவாளர் உதயகுமார், இயக்குநர் ஹரி விஸ்வநாத், சென்னை சர்வதேச குறும்பட விழா இயக்குநர் ஸ்ரீனிவாச சந்தானம், காமன் மேன் மீடியா சந்தோஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவர்கள், இறுதிச் சுற்றுக்குக் குறும்படங்களைத் தேர்ந்தெடுந்தெடுத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. “பார்வையாளர்களைத் திரையரங்கை நோக்கி ஈர்க்க வல்ல புது திற...
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

சினிமா, திரைச் செய்தி
ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும், கலைஞர்களுக்கு கைதட்டல் என்பது தான் ஊக்க சக்தி. அதுவும் முதல் கைதட்டல் என்பது அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் முதல் அங்கீகாரம். அவர்களது நம்பிக்கையைப் பன்மடங்கு உறுதி செய்யும் தருணம் அது. தன் படைப்பு, பெருவாரியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்ற உணர்வு தரும் சொல்லொன்னா பரவசத்திற்கு அளவுகோலே கிடையாது. அப்படி, இளம் படைப்பாளிகளைப் பரவசப்படுத்தும் முன்முயற்சியைத் தான் மூவி பஃப் (Movie Buff - First Clap) மேற்கொண்டுள்ளது. மூன்று நிமிடங்கள் காலளவு கொண்ட குறும்படப் போட்டியை நடத்தி, தேர்வு பெற்ற ஐந்து படங்களைத் தமிழகம் முழுவதும் சுமார் 150+ திரையரங்குகளில் படத்தின் நடுவே வரும் இடைவேளையில் ஒளிபரப்புகின்றனர். மக்கள் தங்களுக்கு விருப்பமான படத்தை ஓட்டு செய்தும் தேர்ந்தெடுக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று படங்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படுவதோடு, நடிகர் சூர...