Shadow

குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

First Clap contest winners

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

மூவி பஃப் நடத்திய ஃபர்ஸ்ட் கிளாப் எனும் குறும்படப் போட்டியின் முடிவுகள் கோலாகலமாக சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் எழில், இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, இயக்குநர் S.U.அருண் குமார், 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன், திரை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, படத்தொகுப்பாளர் K.L.பிரவீன், ஒலிப்பதிவாளர் உதயகுமார், இயக்குநர் ஹரி விஸ்வநாத், சென்னை சர்வதேச குறும்பட விழா இயக்குநர் ஸ்ரீனிவாச சந்தானம், காமன் மேன் மீடியா சந்தோஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவர்கள், இறுதிச் சுற்றுக்குக் குறும்படங்களைத் தேர்ந்தெடுந்தெடுத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பார்வையாளர்களைத் திரையரங்கை நோக்கி ஈர்க்க வல்ல புது திறமைசாலிகளைக் கண்டெடுத்து அங்கீகரித்து, சினிமாத் துறைக்கும் நன்மை பயப்பதற்கே ஃபர்ஸ்ட் கிளாப் உருவாக்கப்பட்டது. சினிமாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு, புது முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தொடக்கம் தான் இந்நிகழ்வு” என்றார் இயக்குநரும், க்யூப் சினிமா டெக்னாலஜியின் நிறுவனர்களில் ஒருவருமான ஜெயந்திர பஞ்சாபிகேசன்.

டிசம்பர் 16, 2016இல் அறிவிக்கப்பட்ட இக்குறும்படப் போட்டிக்கு, 250க்கும் மேற்பட்ட குறும்படங்களைப் பெற்றது மூவி பஃப். அதிலிருந்து 19 குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது மூவி பஃபும், லிட்டில் ஷோஸும். அந்த 19 குறும்படங்களில் இருந்து ஐந்தைத் தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். திரையில் திரையிடப்பட்ட அந்த ஐந்து படங்களில் இருந்து, மூன்று படங்களை மக்கள் அளித்த வாக்குகளைக் கொண்டு தேர்ந்தெடுத்துள்ளனர். 170 திரையில், 5 வாரங்களுக்கு, 28 ஷோக்களெனத் தமிழ்நாடெங்கும் மொத்தம் 23,800 ஷோக்கள் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் பரிசு: இவள் அழகு – 3 லட்சம் பணம் + Internship with 2D

இரண்டாம் பரிசு: App(a) Lock – 2 லட்சம் பணம் + Internship with 2D

மூன்றாம் பரிசு: என்னங்க சார் உங்க சட்டம் – 1 லட்சம் பணம் + Internship with 2D

நான்காம் பரிசு: இந்த நாள் இனிய நாள் – 25000 பணம்

ஐந்தாம் பரிசு: Think & Ink – 25000 பணம்

“இம்முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, ஃபர்ஸ்ட் கிளாப்பின் அடுத்த இலக்கு அகில இந்திய அளவில் திறமைசாலிகளை அடையாளம் காண்பதே! அவர்களின் இந்த முயற்சிக்கு எங்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு” என்றார் க்யூப் சினிமா டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ரங்கநாதன்.