
மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review
நாற்பதாவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது, தானொரு மகவை ஈன்றெடுக்க வேண்டுமென விரும்புகிறார் வித்யா. ஆனால், இந்த வயதிற்கு மேல் பெற்றோராவதை விரும்பாத அருண், மனைவி வித்யாவின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறார். இது, அவர்களைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறது. வித்யாவின் விருப்பம் நிறைவேறியதா, அருண் ஏன் சம்மதிக்கவில்லை, கணவன் - மனைவி சண்டைக்குத் தீர்வென்ன என்பதற்கான விடையுடன் படம் முடிகிறது.
தன் கணவனை வழிக்குக் கொண்டு வர வித்யா கையிலெடுக்கும் ஆயுதம் கவர்ச்சியாகும். பெண் இயக்குநர் படமெடுத்தால், பெண்ணின் உணர்வுகளை அழுத்தமாகப் பேசக்கூடிய வாய்ப்பு அமையும் என்பதைப் பொய்த்துப் போகச் செய்துள்ளார் வனிதா. பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கி வணிகத்திற்குப் பயன்படுத்தும் (exploit) உரிமை ஆண் இயக்குநர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை என ஆணாதிக்க உலகத்திற்குச் சமத்துவத்தை இடித்துரைத்துள்ளார்....

