Shadow

Tag: Naan Pei Pesuren Vimarsanam

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய்ப் படம் என்றாலே காமெடிப் படம் என்றாகி விட்டது சூழல். இந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விட்டாலே மக்கள் ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர். சாலை விபத்தில் சிக்கி இறக்கும் பெண்ணின் மொபைலைத் திருடி விடுகிறான் திருடனான நாயகன். மொபைலில் இன்கம்மிங் காலாக வரும் பேய் செய்யும் அட்டகாசம் தான் படத்தின் கதை. கதாநாயகனாக வைபவ். தனக்குக் கிடைத்த சோலோ வாய்ப்பைச் சிந்தாமல் சிதறாமல் உபயோகித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. வசனம், கதாபாத்திரத் தேர்வு, நாயகன் வீட்டின் உட்புற கலை அமைப்பு, குத்து டான்ஸ் பள்ளியின் முகப்பு என படம் நெடுகும் கலகலப்பை அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்க விட்டுள்ளார் இயக்குநர் S.பாஸ்கர். இயக்குநர் சுந்தர்.சி, இந்தப் படத்தைத் தயாரித்ததில் ஓ...