
நாங்கள் விமர்சனம் | Naangal review
நாங்கள் என்பது ஒரு கண்டிப்பான தந்தை, அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது நாய் ஆகிய ஐவரைக் குறிக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஒரு கலைப்படமிது.
மின்சாரமும, தண்ணீர் வசதியும் இல்லாத வீட்டில், கார்த்திக், துருவ், கெளதம் ஆகிய மூன்று சிறுவர்கள் எல்லா வேலையையும் செய்கின்றனர். அச்சிறுவர்களின் தந்தை ராஜ்குமார் வந்ததும், அச்சிறுவர்களின் இறுக்கமும் பொறுப்பும் மேலும் அதிகமாகிறது. அச்சிறுவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளரும் அவர்களது தந்தையே! அந்தச் சிறுவர்கள் அவர்களது தந்தையிடம் அகப்பட்டுச் சிக்கித் தவித்து, மகிழ்ந்து, தந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள மெனக்கெட்டு, பால்யத்தை இழந்த ஒரு வினோதமான வாழ்க்கை வாழ்கின்றனர். அதிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தும், நடைமுறைக்கு ஒத்துவராத அம்முயற்சியைக் கைவிட்டு மீண்டும் கூடடைகின்றனர். அச்சிறுவர்களது வாழ்க்கை த...


