நமது விமர்சனம்
‘நாம் அனைவரும்’ எனப் பொருள்படும் “மனமன்த்தா” என்ற தெலுங்கு படத்தை ‘நமது’ என தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.
அபிராம்க்கு ஐரா மீது காதல்; சிறுமி மஹிதாவிற்கு சாலையில் வாழும் குட்டி பையன் வீர் மீது பாசம்; காயத்திரிக்கு தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு; சாய்ராம்க்கு குடும்பச் சூழலைச் சமாளிக்க மேனேஜராக பிரமோஷன் வேண்டும். இந்த நான்கு கதைகளின் திரட்டுதான் ‘நமது’ படமாக நீள்கிறது. வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளும் நான்கு நபர்கள்; நான்கு கதைகள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏற்படும் நான்கு சங்கடங்கள் என நல்லதொரு ஃபீல் குட் மூவிக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி.
அபிராமாக விஸ்வாந்த் நடித்துள்ளார். காதலில் விழும் நன்றாகப் படிக்கும் மாணவன் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனாலும், அவரது முகத்தில் தெரியும் அந்நியத்தன்மை காரணமாக மனதில் பதிய மறுக்கிறார். ஐராவாக அனிஷா நடி...