
புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பதற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி-2 திரைப்படம் பலகோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது. திகில் காமெடி கலந்து பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் சந்திரமுகி – 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றப் புகைப்படம், அதாவது ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களை இயக்கிய பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, ...