‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்
NGK படத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் அனுபவம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், "செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
படப்பிடிப்புத் தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
அதேபோல், 3 ந...