Shadow

Tag: Nikisha Patel

நிகிஷா பட்டேலின் லட்சியம்

நிகிஷா பட்டேலின் லட்சியம்

சினிமா, திரைத் துளி
"பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தைத் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபஎஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இப்படத்தைத் தவிர எழில் சார் இயக்கியுள்ள, 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்திலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற 'பாண்டி முனி' படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன். ...
“நானொரு குத்துச்சண்டை வீராங்கனை” – நிகிஷா

“நானொரு குத்துச்சண்டை வீராங்கனை” – நிகிஷா

சினிமா, திரைத் துளி
தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ஆம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்ஷன் ரோலில் அதிரடியாகக் களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார். படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், “நான் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை, எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ...