Shadow

Tag: Nilai Marandhavan movie

நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் கதை. ட்ரான்ஸ், அமேசான் ப்ரைமில் காணக் கிடைத்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய திரையில் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும் ...
நிலை மறந்தவன் – மதமும் மோசடியும்

நிலை மறந்தவன் – மதமும் மோசடியும்

சினிமா, திரைத் துளி
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15இல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குநர் கெளதம் மேனனும், அவருடன் விக்ரம் படத்தில் கெட்ட போலீஸாக நடித்த செம்பன் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகம், இதில் மனதைத் தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும், பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்...