32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நிலை மறந்தவன் – மதமும் மோசடியும்

Dinesh R சேலம் Published: 09/07/2022 2 நிமிட வாசிப்பு Updated: 14/07/2022 சினிமா
எழுத்து அளவு:

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15இல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வில்லன்களாக இயக்குநர் கெளதம் மேனனும், அவருடன் விக்ரம் படத்தில் கெட்ட போலீஸாக நடித்த செம்பன் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகம், இதில் மனதைத் தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும், பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற பெயரில் வெளியிடப்படவுள்ளது.

மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன், அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையைத் தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலிக் கும்பல். படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக் குழு:

>> தயாரிப்பு – தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்
>> இயக்கம் – அன்வர் ரஷீத்
>> இசை – ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்
>> ஒளிப்பதிவு – அமல் நீரத்
>> படத்தொகுப்பு – பிரவீன் பிரபாகர்
>> வசனம் – சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (தமிழாக்கம்)
>> மக்கள் தொடர்பு – KSK செல்வா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.