Shadow

Tag: Nimir review in Tamil

நிமிர் விமர்சனம்

நிமிர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல், அமைதியாய்த் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவனுக்கு எதிர்பாராமல் விழும் அடியை விடப் பெருத்த அவமானம் வேறேதும் இல்லை. அப்படியான அவமானத்துக்குக் காரணமாக இருக்கக் கூடிய மூலத்தை வேரறுத்தாலொழிய நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் அவனுக்குச் சொந்தமாகாது. நேர்ந்த அவமானத்துக்கு நிகராத்க தேர்ந்த பதிலடி கொடுத்து நிமிரும் செல்வனின் கதை 'நிமிர்'. தென்காசி வட்டாரத்தில் (தமிழ் சினிமாவையே 'வட்டார சினிமா' என்று சொல்லும் கமல்ஹாசனின் மொழி அல்ல இது), ஆத்மார்த்தமான ஒளிப்படக்கூடக் கலைஞர் நேஷ்னல் சண்முகத்தின் (மகேந்திரன்) மகன், செல்வம் (உதயநிதி) ஆத்மார்த்தமற்று புகைப்படக் கலையைக் கொண்டு வருமானம் ஈட்டுமொரு பணியைக் கடமைக்காகச் செய்து வருகிறான். ஆனால் அதே செல்வம் (உதயநிதி) பால்யத்தில் முளைத்த காதலொன்றைக் கடமை தவறாது ஆத்மார்த்தமாக செய்து வருகிறான். பணியின் நிமித்தம் செல்...