
பன்றிக்கு நன்றி சொல்லி – ஹீரோ நிஷாந்த் ரூஸோ
சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், சோனி லிவ் தளத்தில், 'பன்றிக்கு நன்றி சொல்லி' எனும் திரைப்படத்தை வெளியிட்டது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சினிமாவில் இயக்குனராகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிஷாந்த் ரூஸோ (Nishanth Russo).
கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்ட நிஷாந்த் ரூஸோவிற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018இல் 'ஆண்டனி' என்கிற படத்தில் கதாநாயகனாகவும், சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குநர் பாலா அரனிடமிருந்து, ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிஷனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ. தற்போது அந்தப் படத்திற்குக் கிடைத்து வரும் பாசிடிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ.
“இந்தப் படத்தில் பல காட்சிகளை யாரும் அறியாத வ...