Shadow

Tag: Nitro star Sudheer Babu

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

Movie Posters, Teaser, காணொளிகள், கேலரி, சினிமா, திரைத் துளி
'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பிற்கான பிரத்தியேக காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி ...
நைட்ரோ ஸ்டார் சுதீர் பாபுவின் அதிரடி திரைப்படம்

நைட்ரோ ஸ்டார் சுதீர் பாபுவின் அதிரடி திரைப்படம்

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு வித்தியாசமான ஜானரிலான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடிக்கிறார். அவரது அனைத்துப் படத்திலும், அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை நாம் காணலாம். அவரது அடுத்த பட்த்திற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெற்கு மும்பையைச் சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு க...