
நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review
'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?' எனப் பத்தாண்டுகளுக்கு முன் 'பிச்சைக்காரன் (2016)' படத்தில் ஏகாந்த்ராஜ் எழுதிய பாடல் வரிகளில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தால் பிச்சைக்காரன், அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி என்று சசியே விளம்பரப்படுத்தியுள்ளார்.இரண்டு படங்களுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
தனது தாய் செல்விக்கும் ஒரு வாழ்க்கை உண்டென உணர்ந்து, அவரை மறுமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறான் மூத்த மகன் பாஸ்கர். முதலில் தயங்கும் செல்வி, பின் அதற்கு மெல்ல செவி சாய்க்கிறார். ஊரும் உறவினர்களும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்றும், செல்விக்கு மறுமணம் ஆனதா இல்லையா என்பதே படத்தின் கதை.
நூறு சாமியின் அச்சாணியாக விளங்குகிறார் செல்வியாக நடித்துள்ள லப்பர் பந்து சுவாசிகா. படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்து,...

