Shadow

Tag: Operation Arapaima movie

ஆபரேஷன் அரபைமா – முப்படையில் பணியாற்றிய இயக்குநரின் மிலிட்டரி ஆப்ரேஷன் படம்

ஆபரேஷன் அரபைமா – முப்படையில் பணியாற்றிய இயக்குநரின் மிலிட்டரி ஆப்ரேஷன் படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பற்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 7 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அரபைமா என்பது ஒரு வகை மீனாகும். அதன் குணநலங்களைப் பிரதிபலிக்கும்படியாக ஓர் இராணுவ ஆபரேஷனுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவ்விழாவில் பேசிய இயக்குநர் பிராஷ், “நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் சினிமாவைக் கற்றுக் கொண்டேன்...
ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

சினிமா, திரைத் துளி
துருவங்கள் 16 படத்தின் மிகப் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் - “ஆபரேஷன் அரபைமா. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர் ப்ராஷ். இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகப் பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையைக் கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்...