32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

Dinesh R சேலம் Published: 07/08/2019 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Operation-Arapaima

துருவங்கள் 16 படத்தின் மிகப் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் – “ஆபரேஷன் அரபைமா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர் ப்ராஷ். இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகப் பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையைக் கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக ‘நாடோடிகள்’ அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது ஆபரேஷன் அரபைமா.

ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

>> தயாரிப்பு – டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ்
>> கதை, திரைக்கதை, இயக்கம் –ப்ராஷ்
>> ஒளிப்பதிவு – ஃபீனிக்ஸ் உதயன்
>> படத்தொகுப்பு – விஜயகுமார், ஷைஜூ
>> இசை – ராகேஷ் பிரம்மானந்தம்
>> பாடல் – முருகன் மந்திரம்
>> வசனம் – ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம்
>> இணை இயக்குநர் – சஜி சுரேந்திரன்
>> சண்டைப் பயிற்சி – கேப்டன் அனில்குமார் (Rtd NSG Commando Trainer), & கமாண்டோ அஜித்குமார், (Thunderbolt Commando Chief, Kerala Police)
>> நிர்வாகத் தயாரிப்பு – சுஜித் சுதர்சன், க்ரீன் லைன் கண்ணன், அப்பு, ஜெயின் ஜார்ஜ், ஷைஜூ யோஹனன்
>> புரொடக்சன் கன்ட்ரோலர் – ஏழுமலை சரவணன், பாதுஷா
>> புரொடக்சன் மேனேஜர் – கவி சேகர், ஷின்ஜோ, ஜிதேஷ், நிரேஷ்
>> புகைப்படம் – வித்யாசாகர்
>> ஒப்பனை – லிபின்
>> டிசைன்ஸ் – ஸ்ரீஸ்டி பிரின்ஸ்
>> VFX – கேமரூன் ஃப்ளிக்ஸ்
>> ஆடியோ – ராஜீவம் மியூசிக்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.