ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்
சுயதொழிலில் ஈடுபட நினைக்கும் பட்டதாரி இளைஞன் சீனி தன் பணத்தைப் பறிகொடுக்கிறான். இங்கு நேர்மையாக இருந்தால் வேலைக்காவது என உணர்ந்து, மண்ணுளி பாம்பு, நவரத்தினக் கல், சஞ்சீவி வேர் என சதுரங்கவேட்டையில் ஈடுபடுகிறான். அவன் நேர்மையாகத் தொழிலில் ஈடுபட்டானா அல்லது சதுரங்க வேட்டையில் வேட்டையாடப்பட்டானா என்பதுதான் படத்தின் கதை.
'சீனி' என்ற தலைப்பில்தான் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதாநாயகியான ஓவியாவிற்கு, 'பிக் பாஸ்' சீசன் 1-இல் கிடைத்த எதிர்பாராத புகழின் காரணமாக ஓவியா எனத் தலைப்பு மாற்றப்பட்டது. அதாவது, 'ஓவியாவ விட்டா யாரு' என்று. பல நாள் கிடப்பில் இருந்து, மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெளியாகியுள்ள படம். KCR பிக்சர்ஸ் சார்பாக மதுரை செல்வம் தயாரித்துள்ளார்.
திவ்யா எனும் பாத்திரத்தில், தந்தி டிவி நிருபராக நடித்துள்ளார் ஓவியா. க்ளைமேக்ஸில், ஆபத்தில் சிக்கும் நாயகனை மீட்பதும் இவ...