Shadow

Tag: Paadam

பேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் – அமீர்

பேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் – அமீர்

சினிமா, திரைச் செய்தி
இன்றைய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைப்பாடுகளைச் சொல்ல வரும் படம் பாடம். இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாகத்தான் இந்தப் பாடம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக், நாயகியாக மோனா, முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குநர் நாகேந்திரன், R.N.R. மனோகர், நகைச்சுவை நடிகை மதுமிதா, யாசிகா, கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவினை மனோ செய்துள்ளார். பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி மோகன், “இன்றைய பள்ளிகளில், பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கபடுகிறது. ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கு என்று தெரிந்து அவனுக்கு அந்தப் ப...
பாடம் சொல்லும் ராஜசேகர்

பாடம் சொல்லும் ராஜசேகர்

சினிமா, திரைத் துளி
நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட சில குழப்பங்களால் பலி வாங்கப்பட்ட ஓர் உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'. இயக்குநர் ராஜேஷுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் திரு.ஜிபின் இப்படத்தைத் தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் பேசுகையில், ''சமீபத்தில் கூட ஒரு உயிரைப் பறித்த ஒரு முக்கிய சமுதாயப் பிரச்னையைப் பற்றி என் 'பாடம்' பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் ம...