Shadow

Tag: Paisa review in tamil

பைசா விமர்சனம்

பைசா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குப்பை பொறுக்கும் தொழிலாளியான முருகனுக்கு அடையாறு நதிக் கரையோரமாக 100 கோடி ரூபாய் கிடைக்கின்றது. அந்தப் பணம் அவனைப் படுத்தும் பாடு அல்லது அவனுக்குள் நேரும் அகப்போராட்டம் தான் படத்தின் கதை. முதல்முறையாகத் தனி நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீராம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல் போகிறதென வருந்தும் முருகனுக்கு, சாலையில் கிடைக்கும் 3000 ரூபாய் பெரிதாகப் படவில்லை. ஆனால், 100 கோடியைப் பார்த்ததும் அவன் மனம் சபலமுறுகிறது. தனது பேன்ட்டின் கிழிசலை 1000 ரூபாய் தாள் கொண்டு அடைக்குமளவு போதை தலைக்கேறுகிறது. முருகனாக ஸ்ரீராம் நன்றாக நடித்துள்ளார். ஆனால், காதலோடு சிரிக்கும் பொழுதுதான் கொஞ்சம் பொழுதுதான் லேசாகத் தடுமாறுகிறார். டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் பணி புரியும் வேணியாக அறிமுகமாகியுள்ளார் ஆரா. அவருக்கு எல்லாவிதமான ஆடையும் பொருந்துகிறது. முருகன், வேணிக்குள்ளான காதல் அத்தியாயம் மிக யதார்...