Shadow

Tag: Pan India actress Iswarya Menon

பான் இந்தியா நடிகையாகும் ஐஸ்வர்யா மேனன்

பான் இந்தியா நடிகையாகும் ஐஸ்வர்யா மேனன்

சினிமா, திரைத் துளி
தமிழ்ப்படம் 2 எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், பான் இந்திய திரைப்படமாக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்தியப் படைப்பாக தயாராகி வருவதால் இந்தப் படம் தமிழிலும் வெளிய...