Shadow

Tag: Pandigai review

பண்டிகை விமர்சனம்

பண்டிகை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டிக்குப் பெயர் தான் பண்டிகை. பணத் தேவையின் பொருட்டு, நாயகன் கிருஷ்ணாவைப் பண்டிகையில் தோற்கும்படி பேசித் தயார் செய்கிறார் சித்தப்பு சரவணன். நாயகனோ சண்டையில் வென்று விட, சரவணனோ குடும்பம், வீடு, கடை என அனைத்தையும் இழந்துவிடுகிறார். அதிலிருந்து சரவணனை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்பான முதற்பாதி ஒரு கதையாகவும்; இரண்டாம் பாதியைத் தனிக் கதையாகவும் கொண்டு திரைக்கதை நீள்கிறது. கிருஷ்ணாவின் கேரியரில் இது அவருக்கு மிக முக்கியமான படமாக அமையும். படபடப்பாகப் பேசி, சதா துள்ளலான உடல்மொழியுடன் தோன்றும் கதாபாத்திரங்களை விட, இந்த சீரியசான ரோல் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அறிமுக இயக்குநர் ஃபெரோஸ், கிருஷ்ணாவிடமிருந்து மிகத் தேர்ந்த நடிப்பை வாங்கியுள்ளார். படத்தின் ஆச்சரியங்களில் ஒன்றாக நிதின் சத்யா உள்ளார். முந்திரி சேட்ட...