Shadow

Tag: Peranbu vimarsanam

பேரன்பு விமர்சனம்

பேரன்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது 'பேட்' மாற்றுவதிலிருந்து, மூளை முடக்குவாதமே வந்தாலும் உடல் தினவுகள் அவர்களையும் விட்டு விடுவதில்லை என்றறிந்து தன் மகளின் உடல்பசியைத் தீர்க்க எவரேனும் கிடைப்பார்களா என்று ஒரு தகப்பனாக யாசிப்பதென்று பேசாப்பொருளைப் பேசும் படம் உலுக்கி விடுகிறது ஆன்மாவை. 'மூளை முடக்கு வாதம் வந்த அல்லது உடல் குறைபாடுள்ள மனிதர்களிடம் இனியாவது பேரன்போடு நடந்து கொள்ளுங்கள் பதர்கள...