Shadow

Tag: Poo Sandi Varan movie

பூசாண்டி வரான் விமர்சனம்

பூசாண்டி வரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம். கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் ஷங்கர் கதாபாத்திரத்தில் வரும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் பிரமாதப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸில் அவரெடுக்கும் முக்கியமான முடிவொன்று, அவரை எதிர்நாயகனாக்கினாலும், படத்தின் நாயகன் என்று குறிப்பிடும்படி சிறப்பாகத் தன் ...
“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

சினிமா, திரைத் துளி
வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் “பூ சாண்டி வரான்” படத்தை வெளியிடுகிறார். ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி "பூசாண்டி வரான்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த த்ரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசி...