‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் இந்தியத் திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. பாகுபலியின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டிய இந்த நடிகர்-இயக்குநர் கூட்டணியின் நட்புறவு, படத்தைத் தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றது.
அப்படி சமீபத்தில், நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
"@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக...