இசையும் நடனமும் இணையும் #arrpd6
பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தனது அடுத்த முயற்சியாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அவர்களது முதல் தயாரிப்பில், பிரபு தேவாவையும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானையும் இணைத்துள்ளனர். இந்தப் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தை, பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS தயாரித்து, இயக்குகிறார்.
இந்தியத் திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அசத்த உள்ளனர். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் இப்படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும் என பிஹைண்ட்வுட்ஸ் நம்புகிறது.
இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது என்றும், இந்திய...