Shadow

Tag: PRABHUDEVA STUDIOS

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார். படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக நட...
தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் திர...
தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் வி...
இது உலக சினிமா செல்லம்

இது உலக சினிமா செல்லம்

சினிமா, திரைச் செய்தி
இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர். “நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்...