32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

Dinesh R சேலம் Published: 11/04/2017 1 நிமிட வாசிப்பு Updated: 12/04/2017 சினிமா
எழுத்து அளவு:

Karuppu Raja Vellai Raja

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார்.

படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகக் கொடி கட்டிப் பறந்த திலீப்குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஏ.எல்.விஜயும், பிரபுதேவாவுவும் இணைந்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் லோகோவை வெளியிட்டனர்.

Karuppu Raja Vellai Raja Logo

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.