Shadow

Tag: Producer N.V.Tirupati Prasad

கோப்ரா – கணிதப் புதிர்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர்

கோப்ரா – கணிதப் புதிர்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தைத் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் 'கோப்ரா'. கணிதப் புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், 'கோப்ரா' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது. இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான படக் குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களைச் ...