Shadow

Tag: PT Sir movie

PT சார் | “சவாலான நெகடிவ் ஷேடில் நடித்துள்ளேன்” – மதுவந்தி

PT சார் | “சவாலான நெகடிவ் ஷேடில் நடித்துள்ளேன்” – மதுவந்தி

சினிமா, திரைச் செய்தி
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'PT சார்' வரும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'PT சார்' ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 ஆவது படமாகும். இதனைக் கொண்டாடும் விதமாகப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மொத்த குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை மதுவந்தி, “இந்தப் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். ‘நான் நடிப்பேனா?’ என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது. அதைத் தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் குழுவிற்கு நன்றி. இந்தக் குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாகப் பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் ஷேட் உள்ள பாத்திரம். அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்த...