Shadow

Tag: Raatchasi thirai vimarsanam

ராட்சசி விமர்சனம்

ராட்சசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு 'ராட்சசி' எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, 'இது தவறு, இப்படிச் செய்யலாம்' எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர். படத்தில் ஏகத்துக்கும் வில்லன்கள் உண்டு. துணைத் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளி நிறுவனர், உள்ளூர் அரசியல்வாதி போன்றோர் தலைமை ஆசிரியைக்குக் குடைச்சல் தருவதை முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளனர். உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் க...