ரித்திகா சிங் – முதல் ஹீரோ
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி.
“எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங்.
“சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....