Shadow

Tag: Rajesh Kallepalli

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்” ஆகும். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கெனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட...